வத்தளையில் உள்ள களஞ்சியம் ஒன்றிலிருந்து 3,620 கிலோகிராம் காலாவதியான பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மேற்கொண்ட சோதனையின்போது, விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பேரீச்சம்பழம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களின் மதிப்பு 6.5 மில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.