• Sat. Oct 11th, 2025

இஸ்ரேலியரின் தாக்குதலில் 2 இலங்கையர்கள் காயம் – பொத்துவில் பகுதியில் சம்பவம்

Byadmin

Sep 1, 2025

அறுகம்பையில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் 2 இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு தம்பதியினர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேலியர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள்.

ஹோட்டல் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது 2 இஸ்ரேலியர்கள் வீதியைத் தடுத்ததால், ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *