• Sun. Oct 12th, 2025

காதலனுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு இளைஞர்கள் செய்த செயலால் அதிர்ச்சி

Byadmin

Sep 2, 2025

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாவிற்காக தனது காதலனுடன் இலங்கைக்கு வந்திருந்த இளம் பெண், கற்பிட்டியின் கண்டகுளிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். கடந்த 30 ஆம் திகதி இரவு வேறொரு ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் இளம் பெண் கலந்து கொண்டுள்ளார்.

சந்தேக நபர்கள் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகவும், அவர் எதிர்த்தபோது அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை சந்தேக நபர்கள் கற்பிட்டி, கண்டகுளிய பகுதியை சேர்ந்த 23 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *