• Sat. Oct 11th, 2025

இப்படியும் நடந்தது

Byadmin

Sep 8, 2025

வீதியோரத்தில் மேய்ந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த ஆட்டோவில் ஏற்றிச்சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

வீதியோரத்தில் நின்ற ஆட்டை லாவகமாக பிடித்து, ஆட்டோவில் கொண்டுசென்ற திருடன், காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில் ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பியோடிவிட்டார்.

ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் அந்த பகுதி வீடுகளில் CCTV கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை கொண்டு ஆட்டோவின் இலக்கத்தை கண்டறிந்து, உரிமையாளரை கண்டுபிடித்தனர்.

இதன்போது உரிமையாளர் தனது ஆட்டோவை வாடகைக்கு வழங்கியதாகவும் இதுவரை ஆட்டோவை திருப்பி கொண்டுவரவில்லை என தெரிவித்து ஆட்டோவை தேடியபோது, பள்ளிவால் ஒன்றுக்கு அருகில் வீதியில் ஆட்டோ, அதன் ஆவணங்கள் இருந்தன. எனினும், ஆட்டோவை விட்டுவிட்டு திருடன் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் ஆட்டோ உரிமையாளரை கைது செய்ததுடன், ஆட்டோவை மீட்டனர்.

வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *