• Sat. Oct 11th, 2025

இஸ்ரேல் – கொழும்பு நேரடி, விமான சேவை ஆரம்பம்

Byadmin

Sep 25, 2025

ஆர்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (24) முதல் டெல் அவிவ் மற்றும் கொழும்பு இடையிலான வாராந்திர விமான சேவைகளைத் தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ARKIA ஏர்லைன்ஸ் விமானம் IZ 639 இன்று முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 6.30க்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும்.

இது புதன்கிழமை காலை 6.15க்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓமான் மற்றும் மாலைத்தீவுகள் வழியாக இஸ்ரேலிய விமானங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விமான சேவை கொழும்பை வந்தடைய சுமார் 9 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IZ 640 விமானம் புதன்கிழமை இரவு 10:30க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை 05:35க்கு டெல் அவிவ் வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கியமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இந்த விமானம் வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *