பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை (check-in) எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விமானப் பதிவுக்கான (check-in) கால அவகாசம் மூன்று மணிநேரத்தில் இருந்து நான்கு மணிநேரமாக நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஓய்வுடனும் இலகுவாகவும் தங்கள் பயணப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.பயணிகள் தாங்களாகவே பதிவுகளைச் செய்து கொள்ளும் வகையில் சுயமாக பயணப் பொதிகளை இடும் வசதியும் (Self-Bag Drop) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமானங்களுக்கான பதிவுகளும் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் முடிவடையும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.