உலகின் பூச்சிகளே இல்லாத முதல் நாடான ஐஸ்லாந்தில் தற்போது முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 பெண் மற்றும் ஒரு ஆண் கொசுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் கொசுக்கள் இல்லாத இடமே இல்லை என சொல்லலாம். அதாவது கொசு வராமல் இருக்கத்தான் கொசு வலை போடுகிறோம். ஆனால் அந்த கொசு வலையிலும் கூட கொசுக்கள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் அன்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்தில் அதிக குளிர்ச்சியான பகுதி என்பதால் அங்கு கொசுக்கள் இருப்பதில்லை. அது போல் ஐஸ்லாந்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் அங்கும் கொசுக்களே இல்லாத நிலை இருந்தது.இந்த நிலையில் ஐஸ்லாந்து தலைநகர் ரேக்ஜவீக் என்ற நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோஸ் எனும் பகுதியில் அக்டோபர் 16ஆம் திகதி கொசுக்களை விஞ்ஞானி பார்ன் ஜல்டாசன் கண்டுபிடித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அக்டோபர் 16ஆம் திகதி பொழுது சாயும் போது ஒரு புது விதமான பூச்சி பறப்பதை நான் படம் பிடித்துள்ளேன். உடனே நான் சந்தேகமடைந்து அதை சேகரித்தேன்.இரு பெண், ஒரு ஆண் பூச்சிகளை கண்டறிந்துள்ளார். அதை பூச்சி ஆராய்ச்சியாளர் மத்தியாஸ் ஆல்பிரட்சனுக்கு அனுப்பினார். அப்போதுதான் அவை கொசுக்கள் என உறுதி செய்யப்பட்டன.