உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.