• Wed. Oct 29th, 2025

விமான விபத்தில் 12 பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம்

Byadmin

Oct 28, 2025

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த தேசிய சரணாலயம் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். டயானி விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான மற்றும் காட்டுப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றதுடன் குறித்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் நீடிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *