இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை குவித்து, இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் பலர், விளையாட்டு வீரர்களை அன்புடன் வரவேற்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கலந்து கொண்டனர்.
எமது தாய் நாடு சார்பில், போட்டியில் 3 தங்கங்களை பாத்திமா சபியா யாமிக் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு எங்கள் மனமார்ந்த மரியாதை மற்றும் வாழ்த்துக்கள்.