• Sat. Apr 4th, 2026

இலங்கையில் தொடர்ந்து குறைவடையும் தங்கத்தில் விலை; மகிழ்ச்சியில் மக்கள்

Byadmin

Oct 29, 2025

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அதேவேளை நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *