இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 20.1% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.