வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால் அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பு சிறுவர்களின் கண்களை பாதித்துள்ளமையால் 6 சிறுவர்களுக்கு கண்கள் பாதிப்பு அதில் நால்வர் முற்றாக பார்வை இழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (10) நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
மயிர்க்கொட்டி தாக்கம் காரணமாக கண்கள் பாதிக்கப்படுகின்றது.அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கண்களில் கல் போன்ற பிற பொருட்கள் உட்புகும் போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.