2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2026 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிதிசார் திட்டங்களை தயாரிப்பது இலகுவாகியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வாகன இறக்குமதி வேகம் குறைவடைவதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் வருமான அதிகரிப்பு வேகமும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பற்றிய வரைவு அறிக்கையை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்வதற்கு எடுத்த தீர்மானத்தை அறிவித்து பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.