• Sun. May 24th, 2026

இலங்கையின் துணிச்சலான முடிவுக்கு – பாகிஸ்தானிய செனட் நன்றி

Byadmin

Nov 14, 2025

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானிய செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் பாராட்டி செனட் உறுப்பினர்கள் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இலங்கையின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *