• Fri. Nov 28th, 2025

கரை ஒதுங்கிய டொல்பின் மீன் – கல்முனையில் சம்பவம்

Byadmin

Nov 19, 2025

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அடை மழை வெள்ளப்பெருக்கு கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.இதே வேளை முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் கடலை நோக்கி ஆற்று வாழைகள் சல்பீனியாக்கள் சென்று கடற்கரையில் தேங்கி காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *