தனது குழாமில் தெரிவு செய்யப்படாத ஒவ்வொரு வீரருடனும் தனது தெரிவுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக உரையாடவுள்ள இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் தோமஸ் துஷெல், 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அட்டவணப்ப்படுத்தவுள்ளார்.
சேர்பியா, அல்பானியாவுக்கெதிரான தகுதிகாண் போட்டிகளுக்கு மத்தியகளவீரர் ஜக் கிரெலிஷ், பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்ட் ஆகியோர் தெரிவாகியிருக்கவில்லை.