உலகளவில் HIV தொற்றைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி இலங்கை அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து வருகிறது.
உலகளவில், 2010 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் புதிய HIV தொற்றுகள் 40% குறைந்துள்ளன. mஎனினும், HIV மீதான ஐக்கிய நாடுகளின் கூட்டறிக்கை (UNAIDS) இந்த வீழ்ச்சி விகிதம் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபடுவதாகவும், இலங்கை தவறான காரணங்களுக்காகத் தனித்து நிற்பதாகவும் குறிப்பிடுகிறது.
அதே காலகட்டத்தில் நாட்டில் மதிப்பிடப்பட்ட புதிய HIV தொற்றுகள் 48% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இது HIV பரவல் அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. mஇலங்கை 2024-இல் 824 புதிய HIV தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது, இது ஒரே ஆண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இதில் ஆண்களே தொற்றுகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். இந்த அதிர்ச்சி தரும் தரவு, நாட்டில் HIV பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.