• Fri. Nov 28th, 2025

98 வயது தாயார் 80 வயது மகனுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்!

Byadmin

Nov 1, 2017

98 வயது தாயார் 80 வயது மகனுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்!

பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார், அதே முதியோர் இல்லத்தில் சென்று தங்கியுள்ளார்.

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்தே வசித்து வருபவர் 80 வயதான டோம்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத டோமுக்கு தினமும் காலை வணக்கம் சொல்லவும், உணவு தயாரானதும் சென்று கூப்பிடவும், அவருக்கு யாரும் இல்லை என்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ada Keating என்ற டோமின் 98 வயது தாயார் தெரிவித்துள்ளார்.

எப்போதெல்லாம் தாம் வீட்டை விட்டு வெளியே செல்கின்றேனோ அப்போதெல்லாம் டோம் தமக்காக காத்திருந்ததாகவும், தாம் வீட்டுக்கு வந்த அந்த நொடி ஓடி வந்து தம்மை இறுக்கமாக அணைத்து அன்பை வெளிப்படுத்துவார் எனவும் Ada Keating நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முதியோர் இல்லத்தில் அனைவரும் தமது தாயாரை அன்புடன் கவனிப்பதாக கூறும் டோம், சமயங்களில் தமது தாயார் தம்மை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதெல்லாம் அடாவின் பேரப்பிள்ளைகளும் தவறாமல் வந்து டோமையும் அடாவையும் சந்தித்துவிட்டு செல்கின்றனர்.

முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் பிலிப் தெரிவிக்கையில், இந்த தள்ளாத வயதிலும் தாய் மகன் பாசத்தை கண்கூடாக பார்க்கும் போது உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *