புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்தின் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவில் வெள்ளநீரில் அடித்துச் சென்ற இரு மாணவர்கள் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர் பெருக்கில் குறித்த மாணவர்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.