நாட்டில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.