• Thu. May 28th, 2026

நுவரெலியாவுக்கு இரவில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்..

Byadmin

Dec 12, 2025

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும், இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்மேடு சரிந்து வீதி தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *