• Sat. Oct 11th, 2025

ஸமான் முஹம்மட் ஸாஜீத் முயற்சியினால் சாய்ந்தமருது குவாசி நீதி மன்றத்திக்கு சுற்றுமதில்

Byadmin

Jun 5, 2017

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இணைந்து  கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் (Youth with talent) 4 இலட்சம் பெறுமதியான வேலை திட்டத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து  சாய்ந்தமருது பொலிவேரியன் நகரத்தில் அமைந்துள்ள குவாசி நீதி மன்றத்திக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  சனி (03.06.2017) அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச உதவி திட்டமிடல் அதிகாரி ஜெஃபர், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி முபாறக் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி அசீம், பிரதேச தொழில்நுட்ப அதிகாரி சல்புதீன்   மற்றும் கல்முனை தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத், கிராம சேவை அதிகாரி பாரூக்,பிரதேச இளைஞர்கள் சமேளத்தின் தலைவர் தானிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீதின் ஏற்பாட்டில் இளைஞர் நாடாளுமன்ற வேலைத் திட்டத்தின் கீழ் இச்சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது.

இதன்போது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைகள் குறித்து அதிதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் அவரது எதிர்கால வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஹுதா  பள்ளிவாசல் பேஷ் இமாம் சியாம் மௌலவியினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்தமருது இளைஞர் சம்மேளனத்தின் பிரதி தலைவர் இஃதார்  மற்றும் இளைஞர் கழக உறுப்பினர் மற்றும் இளைஞர் கழகத்தின் தலைவர்கள் என மேலும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
-ஜி.முஹம்மட் றின்ஸாத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *