• Sat. Apr 4th, 2026

நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா, கீரி சம்பாவின் தேவை அதிகரிப்பு

Byadmin

Jan 26, 2026

மக்களின் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் தற்போது சம்பா மற்றும் கீரி சம்பா போன்ற அரிசி வகைகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.

அதன்படி, நாடு மற்றும் கெகுலு போன்ற அரிசி வகைகளின் தேவையை விட சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளது.

மேலும் விவசாயிகள் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை அதிகமாக பயிரிட ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் இந்த வகைகளின் கொள்முதல் விலையை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *