• Wed. May 27th, 2026

வீடு எரிந்ததில் முதியவர் கருகி பலி

Byadmin

Jan 29, 2026

வேயாங்கொடை – பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் வியாழக்கிழமை (29) அன்று அதிகாலையில் பரவிய தீயில் சிக்குண்டு 73 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும், தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *