• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு போரா சமூகம் வாழ்த்து

Byadmin

Feb 12, 2026

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் , இலங்கையின் புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *