இலங்கைக்கான பாலஸ்தீன் தூதர் இஹாப் ஐ. எம். கலீல், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை (11) வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
பாலஸ்தீன் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிளில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காக பாலஸ்தீன் தூதர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகள் அமைப்பில் பாலஸ்தீன் தொடர்பான தீர்மானங்களில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதியான மற்றும் இடையறாத ஆதரவிற்காக பாலஸ்தீன் அரசாங்கத்தின் சார்பில் அவர் விசேட நன்றியை தெரிவித்தார்.
மேலும், பல தசாப்தங்களாக சர்வதேச அரங்கில் பாலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதை பாலஸ்தீன் மக்கள் உயர்ந்த மதிப்புடன் பாராட்டுகின்றனர் என்பதையும் தூதர் இஹாப் ஐ. எம். கலீல் வலியுறுத்தினார்.