• Sat. Apr 4th, 2026

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

Byadmin

Feb 20, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், தென்னாபிரிக்காவுக்கெதிராக 2, ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான போட்டியில் 1 விக்கெட்டைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிம்பாப்வேயின் பிரட் எவான்ஸ், 15ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் அயர்லாந்துக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அடம் ஸாம்பா, ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் கான், 3. அப்ரார் அஹ்மட், 4. அடில் ரஷீட், 5. பிரட் எவான்ஸ், 6. வனிது ஹசரங்க, 7. ஜேக்கப் டஃபி, 8. அடம் ஸாம்பா, 9. முஸ்தபிசூர் ரஹ்மான், மொஹமட் நவாஸ்.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கெதிராக 100 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் பதும் நிஸங்க, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இது தவிர நமீபியா, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் தலா 25 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் நமீபியா, பாகிஸ்தானுக்கெதிராக 61, 77 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் இஷன் கிஷன், 25ஆம் இடத்திலிருந்து 17 இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

அபிஷேக் ஷர்மா, 2. பில் ஸோல்ட், 3. பதும் நிஸங்க, 4. திலக் வர்மா, 5. சஹிப்ஸடா பர்ஹான், 6. சூரியகுமார் யாதவ், 7. ஜொஸ் பட்லர், 8. இஷன் கிஷன், 9. டிம் செய்ஃபேர்ட், 10. ட்ரெவிஸ் ஹெட்.
இதேவேளை இந்தியாவுக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் சைம் அயூப், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

இதுதவிர மேற்கிந்தியத் தீவுகள், ஸ்கொட்லாந்துக்கெதிரான போட்டியில் 58, 50 ஓட்டங்களைப் பெற்ற நேபாளத்தின் டிபேந்திர சிங் ஐரீ, ஆறாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஐ.அ. அமீரகத்துக்கெதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 40 ஓட்டங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்ஸாய், எட்டாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. சைம் அயூப்,
2. சிகண்டர் ராசா,
3. ஹர்திக் பாண்டியா,
4. டிபேந்திர சிங் ஐரீ, அஸ்மதுல்லா ஓமர்ஸாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *