• Sat. Apr 4th, 2026

இலங்கை பட்டதாரிகள் குறித்து அதிர்ச்சித் தகவல்

Byadmin

Feb 27, 2026

இலங்கையிலிருந்து பட்டதாரிகளின் வெளியேற்றம் பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

அரசு பல்கலைக்கழக பட்டதாரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மருத்துவம், பொறியியல் மற்றும் விவசாயம் போன்ற முக்கியமான துறைகளில் வெளியேற்ற வீதம் 80% முதல் 90% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் சுமார் 42,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர் (கலை – 25%, முகாமைத்துவம் – 20%, பொறியியல் – 13%, மருத்துவம் – 10%).

குறிப்பாக அறிவியல் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்ற மிகச்சிறந்த மாணவர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

பல்கலைக்கழகக் கல்விக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 87 பில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.

இலங்கையின் 24.5% மக்கள் வறுமையில் வாடும் நிலையில், எமது நாட்டின் வரிப்பணத்தில் உருவான மருத்துவர்களும் பொறியியலாளர்களும் மேற்கத்தேய நாடுகளின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

இது இலங்கையின் இலவச கல்வியை செல்வந்த நாடுகளுக்கான ஒரு ‘அபிவிருத்தி உதவித் திட்டமாக’ மாற்றியுள்ளது” என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழக முதலீட்டை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு சர்ச்சைக்குரிய ஆலோசனைகள் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு செல்லும் பட்டதாரி ஒருவர் அரசாங்கத்திற்கு 10,000 – 15,000 அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த வேண்டும்.

அல்லது, புலம்பெயர்ந்தவர்கள் தமது குடும்பங்களுக்கு குறைந்தது 50,000 அமெரிக்க டொலர்களை பணமாக அனுப்ப வேண்டும்.

எவ்வாறாயினும், இவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *