சவூதி,எகிப்து, பஹ்ரைன், ஓமான், டுபாய் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவை துண்டித்துள்ளன!
பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கவே இந்த அதிரடி தீர்மானம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டார் நாட்டவர்களை 14 நாட்களுக்குள் வெளியேறி செல்லுமாறு பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பஹ்ரைன் நாட்டவர்களை 48 மணிநேரத்திற்குள் கட்டாரில் இருந்து வெளியேறுமாறு கட்டார் அறிவித்துள்ளது!
அத்தோடு, தமது தரை, கடல் , ஆகாய வழிகள் எதையும் கட்டார்இனி பயன்படுத்த முடியாது என்று இந்த நாடுகள்அறிவித்துள்ளதால், கட்டார் விமானங்கள் பயணிப்பதற்குஈரானின் ஆகாய வழியை பயன்படுத்த வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. எனினும் இதற்கு ஈரான் இன்னும் அனுமதிஅளிக்கவில்லை.-தில்ஷான் முகம்மத்-