பெற்றோல் பிரச்சினை! அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு நேற்றையஅமைச்சரவை கூட்டத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது.
இதன் போது இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மங்கள வரவு செலவுதிட்டத்தில் சலுகைகள் வழங்கி மக்களுக்கு ஆறுதல் அளிக்க திட்டமிட்டிருந்தநிலையில் இந்த நிகழ்வு அந்த திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயம் பெட்ரோல் ஷெட்களில் அரசாங்கத்திற்கு எதிராககூட்டம் போடும் அளவுக்கு உக்கிரம் அடைந்துள்ளதாக அவர்சுட்டிக்கட்டியுள்ளார்.
அங்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க சந்திம வீரக்கொடிஉள்ளிட்டோர் தற்போது ஏற்பட்டுள்ள நிலமையை விமர்சித்துள்ளஅதேவேளை தயாகமகே அமைச்சர் அர்ஜுனவுக்கு சார்பாக பேசியுள்ளார்.
ஏற்கனவே கிரிக்கட் விவகாரத்தில் கீரியும் பாம்புமாக இருக்கு அர்ஜுன – தயாசிரி இடையே வாக்குவாதம் முற்ற ஜனாதிபதி தலையிட்டு அதனைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.