புதிய நீதி அமைச்சர் நீதியை நிலைநாட்டிவிட்டாரா ?
என்னை நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி மூன்று மாதங்கள்ஆகியிருக்கும் நிலையில் புதிய நீதி அமைச்சர் எதனை புதிதாகசெய்துள்ளார் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கேள்விஎழுப்பியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தை நான் பாதுகாப்பதாக சிலர் குற்றம்சுமத்தினார்.தற்போது ராஜபக்ஷ குடும்பத்தை கைது செய்துவிட்டார்களா ? நாட்டின் நீதி துறையின் பொறிமுறைகளை பற்றி அறியாத சில முட்டாள்களேஎன்மீது குற்றம் சுமத்தினார்கள்.
நாட்டின் வளங்களை குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தைவெளிநாட்டுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமைக்காகவேஎன்னை பதவி நீக்கினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்இதனை குறிப்பிட்டார்.