கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கம்
மொபைல் பிரவுசர்களில் மிகவும் பிரபலமான யூசி பிரவுசர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அலிபாபா’வே இதற்கு உரிமையாளராக இருந்தது.
யூசி பிரவுசர் பயனர்களின் தகவல்களைச் சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாகச் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கப்பட்டிருக்கிறது என்றும் இதன் மற்றொரு வெர்ஷனான யூசி பிரவுசர் மினி நீக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
தரவிறக்கத்தை அதிகரிப்பதற்காக தவறான வழியில் செயல்பட்டதே நீக்கப்பட்டதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.