• Sun. Oct 12th, 2025

யாருமே அறிந்திராத அழகு சாம்ராஜ்ஜியம் கிளியோபட்ராவின் வெளிவராத ரகசியங்கள்…!

Byadmin

Nov 21, 2017

யாருமே அறிந்திராத அழகு சாம்ராஜ்ஜியம் கிளியோபட்ராவின் வெளிவராத ரகசியங்கள்…!

எகிப்து என்றாலே பிரமிடு, மம்மிக்கள், கிளியோபட்ரா, பூனை, அவர்களது விசித்திரமான சித்திர எழுத்துக்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகிய அனைத்துமே நம் நினைவிற்கு வரும். உலகின் ஆரம்பக் காலக்கட்ட கலாச்சாரம், நாகரீகம், மொழி என பலவற்றின்

ஆனால், இவர்களது வாழ்வியல், மொழி, சமூக கட்டமைப்பு, இவர்களை ஆட்சி செய்த அரசர், அரசிகள் குறித்த பல உண்மைகள் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

உண்மையில், சிறந்த எகிப்து அரசியாக திகழ்ந்த கிளியோபட்ரா ஒரு எகிப்தியரே கிடையாது, இப்படி நம்மை ஆச்சரியப்படுத்தும் உண்மைகள் பலவன இருக்கின்றது.

எகிப்தின் பேரழகி கிளியோபட்ரா பற்றிய ரகசியங்கள்

கிளியோபாட்ரா பண்டைய காலத்து எகிப்தின் பேரழகி, அரசி என நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கிளியோபாட்ரா ஒரு எகிப்தியரே கிடையாது. இவர் கிரேக்க வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அலெக்ஸ்சாண்டர் தி கிரேட்டின் தளபதிகளில் ஒருவரின் வம்சாவளி என்றும் கூறப்படுகிறது.

கிளியோபாட்ராவை வெறும் அழகு கொண்டு மட்டுமே பெரும்பாலான வரலாற்று சான்றுகள் பதியப்பட்டுள்ளது. ஆனால், கிளியோபாட்ரா கணிதம், தத்துவம், வானியல் மற்றும் 12 மொழிகள் பேசுவதில் திறமைசாலியானவர்.

சிறந்த பெண் ஆட்சியர் வரலாற்று கூற்றின் படி, எகிப்தை மூன்று பெண்கள் ஆட்சி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதில் சிறப்பாக ஆட்சி செய்தவர் கிளியோபட்ரா (Hatshepsut) என்று கருதுகிறார்கள்.

கிளியோபாட்ரா என்பவர் ஒருவர் இல்லை என்றும், பலர் இப்பெயரில் வாழ்ந்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது. கிளியோபாட்ரா அவரது இரண்டு சகோதரர்களை வெவ்வேறு காலக்கட்டத்தில் திருமணம் செய்துக் கொண்டார் என்பதை நாம் அறிந்துள்ளோம்.

ஆனால், அவரது தாய், தந்தை இருவரும் கூட சகோதர, சகோதரி தான் கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா குறும்பு சேட்டைகளில் விரும்பி செயல்படுவார்களாம்.

அதில் பரவலாக அறியப்பட்ட ஒன்று, இருவரும் மதுபானம் அறிந்துவிட்டு, தெருவில் செல்லும் பொதுமக்களிடம் ஏதேனும் செய்ய சொல்லி, பிறகு அதை ஜோக்குக்காக செய்தோம் என்று நகைப்பார்கள் என்றும் சில தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

எகிப்தியர்களின் வாழ்க்கை முறை பற்றிய மர்மங்கள்தி கிரேட் பிரமிடு ஒரு இலட்சம் அடிமைகளை கொண்டு கட்டப்பட்டது என்று ஒரு கருத்து நிலவு வருகிறது.

ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்களின் கருத்தின் படி, தி கிரேட் பிரமிடு 5000 நேரடி ஊழியர்கள் மற்றும் 2,000 தற்காலிக தின கூலி ஊழியர்களை கொண்டு கட்டப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலும் எகிப்தியர்கள் பூனைகளை தங்கள் செல்ல பிராணிகளாக வளர்த்தனர் என்று அறியப்படுகிறது. ஆனால், பூனையை தவிர, நாய், சிங்கம், குரங்கு, பருந்து, பபூன் எனும் குரங்கு வகை விலங்கு என பல விலங்குகளை இவர்கள் செல்ல பிராணிகளாக வளர்த்துள்ளனர்.

எகிப்தியர்கள் அரசர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், முக்கிய மனிதர்களை மட்டும் மம்மிஃபைட் செய்து வைக்கவில்லை. தாங்கள் அன்பாக வளர்த்த பூனை, முதலை போன்றவற்றை கூட மம்மிஃபைடு செய்து வைத்துள்ளனர்.

எகிப்தில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு கிடையாது. அவர்கள் ஆண், பெண் இருவரையும் ஒரே மதிப்புடன் நடத்தி, சட்ட திட்டங்களில் கூட சமூகத்தில் இருவருக்கும் சம அளவு பங்களித்துள்ளனர்.

பண்டையக் காலத்து எகிப்தியர்கள் தங்களின் டயட்டில் இறைச்சி, பீர், ஒயின், பிரெட், தேன் போன்றவற்றை மிகுதியாக உட்கொண்டுள்ளனர். பண்டையக் காலத்து எகிப்தியர்கள் உடலை பதப்படுத்தும் மம்மிஃபைடு செய்து வந்தார்கள் என கூறப்படுகிறது

ஆனால், தென் அமெரிக்கர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இந்த முறையை கடைபிடித்து வந்துள்ளனர். ஓர் உடலை மம்மியாக பதப்படுத்தும் போது, அந்த உடலில் இருந்து மூளை மற்றும் குடலை அகற்றி விடுவார்கள்.

உடலில் இருந்து இதயத்தை மட்டும் நீக்க மாட்டார்கள். பண்டையக் காலத்து எகிப்தியர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அரைக்கச்சைகளை (loincloths)-ஐ ஆணுறையாக பயன்படுத்தி வந்திருக்கலாம் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனித நாகரீக தோற்றத்தில் பழைமையான மொழிகளில் ஒன்றாக கருதப்படுவது எகிப்தின் சித்திர வடிவங்கள். ஏறத்தாழ 2000 எழுத்துக்கள் கொண்டுள்ள இதை பண்டைய எகிப்தியர்கள் எழுத பயன்படுத்தி வந்துள்ளனர்.

பண்டையக் காலத்து எகிப்தியர்கள் மூன்று வித்தியாசாமான காலண்டர்களை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒன்று வானியல் காலண்டர், மற்றொன்று தினம் பயன்படும் காலண்டர்.

மற்றொன்று சந்திர காலண்டர். பண்டையக் காலத்து எகிப்தியர்கள் தான் உலகின் முதல் மருத்துவர்கள், முதல் பொறியாளர்கள் மற்றும் முதல் கட்டிட கலைஞர்கள் என்று உலக அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *