• Fri. Nov 28th, 2025

சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், தென்னிலங்கை மக்களுக்கு உதவி (படங்கள்)  

Byadmin

Jun 6, 2017
கடந்த சில நாட்களாக இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ளம் அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ் பிரதிநிதிகள்) சார்பில் பொறுப்பேற்று, சுவிஸில் உள்ள பௌத்த விகாரை பீடாதிபதியின் உதவியுடன் இன்றையதினம் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்க்காக ஒப்படைத்து வைக்கப்பட்டது.
மேற்படி பொருட்களை சுவிஸ் பேர்ண் மாநில, கும்லிங்கன் பகுதியில் உள்ள “சிலோவா” வைத்தியசாலையில் (SILOHA Spital, Gumlingen) தொழில் புரியும் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை), அங்குள்ள நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த “சிலோவா வைத்தியசாலை” நிர்வாகம் தந்த பொருட்களுடன், மேலும் சில தமிழ் உறவுகளும் தந்த பொருட்கள் யாவும், சுவிஸில் உள்ள சூரிச் பௌத்த விகாரை பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்களின் உதவியுடன் இன்றையதினம் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்க்காக ஒப்படைத்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து, சூரிச் பௌத்த விகாரை பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நாம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு வாழ்ந்தாலும், தமிழ் சிங்களம் என்ற வேறுபாடு இன்றி, புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவி புரிந்த அனைத்து தமிழ் மக்களுக்கும், இதனை ஏற்பாடு செய்த அமைப்பின் (“தாயகம்” -புங்குடுதீவு) பிரதிநிதிகளுக்கும், தமது நன்றி எனவும், இவர்களுக்கு புத்தபெருமானின் ஆசி கிடைக்க, தாம் பிரார்த்திப்பதாகவும்” தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முதல் விடுத்த எமது அறிவித்தலைக் கண்டதும், உடன் எமது சுவிஸ் பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டு, தம்மிடம் உள்ள “உடுதுணிகளை” தந்து உதவிய திரு.திருமதி. கைலாசநாதன் (குழந்தை) குடும்பத்துக்கும், திரு.திருமதி. இரத்தினசிங்கம் (லீஸ்) குடும்பத்துக்கும், திரு.திருமதி. நாதன் (லீஸ்) குடும்பத்துக்கும், திரு.திருமதி ராஜா (சூரிச்) குடும்பத்துக்கும், திரு.திருமதி. பன்னீர் (சூரிச்) குடும்பத்துக்கும், திரு.திருமதி. தயாபரன் குடும்பத்துக்கும் (கீர்க்பேர்க்), திரு.திருமதி.குமார் (ஒபேர்புர்க்) திரு.திருமதி அன்பு (சூரிச்) குடும்பத்துக்கும், திரு.திருமதி.சிவமேனகை (பீல்) குடும்பத்துக்கும் எமது நன்றிகள் பல…
அதேபோல் மேற்படி உடுதுணிப் பொதிகளை சுவிஸில் ஏற்றி, இறக்குவத்துக்கான போக்குவரத்து செலவுகளை, “சுவிஸ்ராகம் கரோக்கி இசைக் குழு”வுடன், திரு.ராஜா (சூரிச்), திரு.பன்னீர் (சூரிச்), திரு.அன்பு (சூரிச்), திரு.சிவமேனகை (பீல்) ஆகியோரும் வழங்கி இருந்தனர். அதேபோன்று மேற்படி “உடுதுணிகளை” பொதி செய்வதுக்காக, உதவிகள் புரிந்த திருவாளர்கள் கீதன், தயா, குழந்தை, குமார், இன்பம், பன்னீர், அன்பு, சதீஷ், சஞ்சய், றொபின்சன், கந்தோல் போன்றோரும் உதவிகள் புரிந்து இருந்தனர். அனைவருக்கும் எமது நன்றிகள் பல…
அத்துடன் சுவிஸில் உள்ள சூரிச் பௌத்த விகாரை பீடாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்து உதவிய திரு.அஜீவன் அவர்களுக்கும் எமது நன்றி..
** “இன, மத பேதம் பாராமல்; மனிதத்தையும், மனித நேயத்தையும் மதிக்கும் “மனிதர்கள்” நாம்.. என்பதை புரிய வைத்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றி”.. **
கடந்த காலங்களிலும், “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, செட்டிக்குளம், மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புங்குடுதீவு உறவுகளின் (குழந்தை, குமார், தயா, பன்னீர், அன்பு) உதவியுடன், எம்மால் முடிந்த உதவிகளை புரிந்து இருந்தோம்.
இப்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினை தொடர்ந்து “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றி..
இவ்வண்ணம்..
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு.
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்” -புங்குடுதீவு 
05.06.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *