• Sat. Nov 1st, 2025

இந்த நிறத்திலுள்ள கத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்..!!

Byadmin

Nov 1, 2025

இந்த நிறத்திலுள்ள கத்தரிக்காயை வாங்கி சமைப்பது தான் ஆரோக்கியமாம்..!!

நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம்.

காய்கறிகள் இயற்கையாக பல்வேறு நிறங்களை பெற்றுள்ளன. பஞ்சபூதங்களின் சேர்க்கையைக் கொண்டு இந்த நிறங்கள் உருவாவதாக சொல்கிறார்கள். நிறங்களை வைத்து காய்கறிகளின் உடலுக்கு தரும் நலனையும் தீர்மானிக்கலாம் என்கிறார்கள். உதாரணத்திற்கு கத்தரிக்காயை பார்க்கலாம்.

கத்தரிக்காயில் மூன்று வகைகள் காணப்படுகின்றன. நீல நிற கத்தரிக்காய் என்பது பஞ்சபூதத்தில் தீ மற்றும் வாயு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையால் உருவாகும் நிறம் ஆகும். இந்த செடி பூத்து காயாகும் போது சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் நீல நிறத்தை இழுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து இரும்புச் சத்தை கிரகிக்கிறது.

இதன் காரணமாக, இதன் மேல் தோல் இருண்டு நீலமாகவும், காயின் உட்புறம் வெண்மையாகவும் இருக்கிறது. இந்த நிற கத்தரிக்காய் கல்லீரலின் பலவீனம், ரத்தமின்மை, மந்தத்தன்மையை போக்குகிறது.

வெண்ணிற கத்தரிக்காய் சூரியனிடம் இருந்து ஏழு வண்ணங்களையும் கிரகித்துக் கொள்கிறது. ஆனால், அக்கினியின் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது கல்லீரலைத் தூண்டி பித்தத்தை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது மலத்தை இளக்குகிறது. அதிகமாக உண்டால் அஜீரணக் கோளாறுகளை உண்டு பண்ணும். குழந்தைகளுக்கு இந்த நிறக் கத்தரிக்காயை உணவில் சேர்ப்பதால் கல்லீரல் நன்றாக வேலை செய்கிறது. கல்லீரலுக்கு வெண்ணிற கத்தரிக்காய் நல்லது.

வெளிர்பச்சை நிற கத்தரிக்காய் பயன் தருவதில் வெண்ணிற கத்தரிக்காயை ஒத்திருக்கிறது. இதுவும் கல்லீரலை நன்கு செயல்பட வைக்க உதவுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பார்கள். எனவே, பஞ்சபூதங்களில் உடலில் எது குறைபாடாக இருக்கிறதோ அதனை ஈடுகட்ட பொருத்தமான நிறக்காய்கறிகளை தேர்வு செய்து உண்ணலாம் என்கிறார்கள், இயற்கை மருத்துவர்கள்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *