• Sat. Nov 1st, 2025

பித்த வெடிப்பால் இரத்தக்கசிவா..? பாதத்தில் இருந்த இடம் தெரியாமல் போக்கும் அருமையான மருந்து!

Byadmin

Nov 1, 2025

பித்த வெடிப்பால் இரத்தக்கசிவா..? பாதத்தில் இருந்த இடம் தெரியாமல் போக்கும் அருமையான மருந்து!

ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது.
பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
சீரகம்
தனியா
பனங்கற்கண்டு
செய்முறை:
இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.

குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
குப்பைமேனி
விளக்கெண்ணெய்
மஞ்சள் பொடி.
ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும்.
இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.

பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *