இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பங்களதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பங்களதேஷ் பிரதமர் சேக் ஹசீனா, இந்த நிதியுதவி தொடர்பில் நேற்றைய தினம் அறிவித்துள்ளார் என அந்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக அண்மையில் பங்களதேஷ் பிரதமர் இரங்கல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவி இலங்கைக்கான பங்களதேஷ் தூதுவரால், இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.