• Fri. Nov 28th, 2025

நீர்கொழும்பு நண்டினால் மயங்கிய மலேஷிய பிரதமர் – சங்கா + மஹேல அமைச்சில் சம்பவம்

Byadmin

Dec 26, 2017

(நீர்கொழும்பு நண்டினால் மயங்கிய மலேஷிய பிரதமர் – சங்கா + மஹேல அமைச்சில் சம்பவம்)

இலங்கை வந்திருந்த மலேஷிய பிரதமருக்கு விசேடமாக தயாரிக்கப்பட்ட நண்டு உணவு வழங்கப்பட்டதாம். நீர்கொழும்பு மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்த நண்டுகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உண்டு அந்த ருசியில் மயங்கிப் போனாராம் மலேஷிய பிரதமர்.
“மலேஷியாவிலும் இப்படி கடல் உணவு சாப்பாட்டுக்கான உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், இப்படியான பெரிய நண்டுகளை நான் கண்டதில்லை. நீங்கள் கோலாலம்பூரில் இந்த உணவகத்தின் கிளையொன்றை திறவுங்களேன்” என்று இந்த விருந்தை ஒழுங்குசெய்திருந்த மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் முஸம்மிலிடம் கேட்டாராம் மலேஷிய பிரதமர்.
மலேஷிய பிரதமருக்கு நண்டு உணவை வழங்கிய அந்த உணவகம் பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்குச் சொந்தமானது. “நண்டு அமைச்சு’ என்ற பெயரிலான இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *