(உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்களிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்களிப்பு ஆணைகள் கட்டளையின் 38ம் சரத்துக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வாக்களிப்பு குறித்த விசேட அறிவித்தல் இன்று(26) வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
குறித்த வர்த்தமானியில் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் நேரம் என்பவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது தவிர்ந்த தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்கள் குறித்த பெயர்களும் குறித்த வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தலானது பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் ஏற்கனவே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த தேர்தலில் தபால் வாக்கெடுப்பு ஜனவரி மாதம் 25 – 26ம் திகதி நடைபெறும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.