• Sat. Apr 4th, 2026

வில்பத்து விடயத்தில் பொதுபல சேனாவை எச்சரித்த பஸில்

Byadmin

Dec 27, 2017
(வில்பத்து விடயத்தில் பொதுபல சேனாவை எச்சரித்த பஸில்)
“உனக்கு அரசியல் விளங்குவதில்லை”யென நாம் வில்பத்து தொடர்பில் குரல் கொடுத்த போது பசில் ராஜபக்ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வில்பத்து விடயம் தொடர்பில் தாம் குரல் கொடுத்த போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்தார்.

எனக்கு எந்தவொரு அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை கிடையாது. இருப்பினும், நடந்த உண்மையை கூற தயங்கமாட்டேன்.

வில்பத்து பிரச்சினை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே ஏற்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பாதுகாத்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வில்பத்து விவகாரம் தொடர்பில் கண்டறிய ஆணைக்குழு அமைக்க தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *