(சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயதுடைய தாத்தா.. எங்கு தெரியுமா..?)
இந்தியா, ஜார்கண்ட் மாநிலத்தில் சேற்றை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் 100 வயது தாத்தா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். #Jharkhand #tamilnews
ஒரு வேளை உணவு சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ் மாவட்டத்தில் வசிக்கும் கரு பஸ்வான் என்கிற 100 வயது தாத்தா உணவு உண்ணாமல் வெறும் சேற்றை மட்டும் உண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். 11 வயதில் இருந்தே தாம் சேறு சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
குடும்ப வறுமை காரணமாக நான் 11 வயதில் இருந்தே சேறு சாப்பிட ஆரம்பித்தேன். பின்னர் இது ஒரு தினசரி பழக்கமாகவே ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.-