• Sat. Nov 29th, 2025

எலும்புகள் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?

Byadmin

Nov 29, 2025

(எலும்புகள் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்..?)

எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

* பாலில் கால்சிய சத்து அதிகம் உள்ளது. பால் குடிப்பது சிலருக்குப் பிடிக்காவிட்டால், தயிரை அதிகமாக தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பாலில் உள்ளதைப் போல தயிரிலும் கால்சியம் அதிகமாக உள்ளது. பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

* சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

* கடல் உணவுகளில், இறாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால், இறாலைச் சமைக்கும்போது, அதை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதில் உள்ள கால்சிய சத்து போய்விடும்.

* ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

* மீன் வகைகளில் மத்தி மீனிலும் கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எனவே மத்தி மீனை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* பச்சை இலைக் காய்கறிகளில் கால்சிய சத்து அதிகம். அந்த வகையில், பசலைக் கீரை மற்றும் புராக்கோலி போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால், நமது உடம்புக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

* கொட்டைப்பருப்பு வகைகளில் ஒன்றான பாதாமில், வைட்டமின், கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. எனவே தினமும் பாதாம்பருப்புகளைச் சாப்பிட்டு நம் எலும்புகளை பலப்படுத்திக்கொள்ளலாம்.

* ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *