• Sun. Oct 12th, 2025

உடலை நகத்தால் சொறிந்தால் வெள்ளையாக வருகிறதா? கரணம் இதுதான்..!

Byadmin

Jan 24, 2018

(உடலை நகத்தால் சொறிந்தால் வெள்ளையாக வருகிறதா? கரணம் இதுதான்..!)

நகத்தால் உடலில் மேற்பகுதியில் சொரண்டினால் வெள்ளையாக தெரிகின்றதா அப்படியென்றால் அது வறண்ட சருமத்தின் பாதிப்புதான். வறண்ட சருமத்தை உள்ளவர்கள் எண்ணைப் பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை விட வறண்ட சருமத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகும் ஏனெனில் எண்ணைப் பிசுபிசுப்பான சருமத்தை குளிர் மற்றும் வெயில் அதிகமாக தாக்காது. ஆனால் வறண்ட சருமத்தின் மேல் நேரடியாக இயற்கை காரணிகளான தூசு, வெப்பம், குளிர் ஆகியவைகள் தாக்கிவிடும். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

மேலும் வறண்ட சருமத்தினால் கொப்புளங்கள் எளிதில் தாக்கிவிடும். மேலும் தேமல் போன்றவைகள் ஏற்படும். எண்ணை சருமம் உள்ளவர்கள் தோலின் மீது எண்ணை ஒரு படலமாக இருந்து சருமத்தை இவைகளிடமிருந்து பாதுகாக்கும்.
தேவை‌யி‌ல்லாம‌ல் உ‌ங்க‌ள் ‌விர‌ல் நக‌ங்கள‌ை‌க் கொ‌ண்டு முக‌த்‌தி‌ல் தே‌ய்‌க்கா‌தீ‌ர்க‌ள். முக‌த்‌தி‌ல் ‌விர‌ல்களை வை‌ப்பதையே த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

குளிர் காலங்களில் வறண்ட சருமம் தோல் உரிவது போன்று தோன்றினால். இர‌வி‌ல் தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு ‌தினமு‌ம் தேங்காய் எண்ணை அல்லது ஆ‌லி‌வ் ‌ஆ‌யிலை முக‌த்‌தி‌ல் த‌ே‌ய்‌த்து ந‌ன்கு மசா‌ஜ் செ‌ய்யு‌ங்க‌ள். இதனை தொட‌ர்‌ந்து செ‌ய்து வ‌ந்தா‌ல் வற‌ண்ட சரும‌ம் பு‌தி‌ப்பொ‌லிவை‌ப் பெறு‌ம்.

வாரம் ஒரு முறையாவது எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும். அதனால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி வரும் மேலும் எண்ணைப்பிசுபிசுப்பு தோலில் வரும்.வறண்ட சருமம் உடைய சிலர் ஒரு நாளைக்குப் பல முறை கிரீம் அப்ளை செய்யும் பழக்கங்களைக் கொண்டிருக்கின்றனர். சருமத்தின் மீது அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது தான். அதற்காக கண்ட கண்ட கிரீம்களை போட வேண்டாம். அவற்றிற்கு பதில் சில வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

தக்காளிச்சாறு மற்றும் வெள்ளிரிச்சாறு ஆகியவற்றை நன்கு மசித்து முகத்திற்கு பூசிவிட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பின் முகத்தை கழுவிவிட்டால் போதும்.பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளதால் அது சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். 20 மில்லி பாதாம் ஆயிலுடன் 4 துளிகள் ஜெரானியம் ஆயிலைக் கலந்து கொள்ள வேண்டும். இது சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகப் பயன்படும்.

தயிரில் அதிக அளவில் லாக்டிக் அமிலம் உள்ளது. அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கும் தன்மையுடையது. இதனுடன் தேனைச் சேர்த்துத் தடவினால் சருமத்தில் நல்ல மாய்ச்சரைஸராகப் பயன்படுகிறது. கால் கப் தயிருடன் 3 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

அதனுடன் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து முகத்துக்கு ஸ்கிரப் ஆகப் பயன்படுத்துங்கள். தேனைப் போடும் பொழுது புருவம், கண்கள், கண்களைச் சுற்றியுள்ள இடங்களைத் தவிர்க்கவும். கடலைமாவுடன் பால் மறறும் தேன் கலந்து முகத்துக்குப் பயன்படுத்தவும். முகத்தில் உள்ள மாசுக்களை பால் நீக்கும். தேன் சருமத்தை மென்மையாக்கும் தன்மையுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *