(இஸ்லாத்தை ஒழிக்க, முயன்றவருக்கு இறைவன் காட்டிய வழி)
ஜெர்மனியில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து வந்த தீவிரவாத எதிர்ப்பு கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான ஆர்துர் வெக்னர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
இஸ்லாத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் இஸ்லாத்தின் மூல ஆதாரமான குர்ஆனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று குர்ஆனில் மனித சமூகத்திற்கு எதிரான குறைகளை கண்டறிய ஆங்கில மொழியாக்கம் செய்த குர்ஆனை ஆய்வு செய்ய தீவிரமாக இறங்கினார்.
அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. குர்ஆனின் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் வார்த்தை என்பதால் அவரது பெரும் முயற்சி தோல்வியில் முடிந்து மேலும் அவர் குர்ஆனின்பால் ஈர்க்கப்பட்டார். படிக்க படிக்க ஒவ்வொரு வார்த்தையும் அவரை புரட்டிப்போட்டது. மனித பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்கை குறித்து குர்ஆன் பேசாத துறையே கிடையாது என்பதை கண்டு திகைத்து நின்றார். குழந்தை வளர்ப்பு, திருமணம், குடும்பவியல், விவாகரத்து, பொருளாதாரம், சொத்துரிமை, சட்டம், நீதி, சமத்துவம், சமூகம், மனிதநேயம், ஆன்மீகம் என அனைத்தையும் குர்ஆன் பேசுவதை மெய் சிலிர்த்தார். நிச்சயமாக மனித கைகளால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குர்ஆனை எழுதியிருக்க முடியாது. திண்ணமாக இது இறைவனின் வார்த்தை என்பதை உணர்ந்தார். இந்நிலையில் கட்சியிலிருந்து முழுமையாக விலகிய அவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.