(“முடிந்தால் எனது, பிரஜாவுரிமையை பறித்துக்காட்டுங்கள்” – மகிந்த சவால்)
முடிந்தால் தமது பிரஜாவுரிமையை பறித்துக்காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
“பிரதமர் எனது பிரஜாவுரிமையை நீக்கிவிட முடியும் எனக்கூறிவருகிறார். முடிந்தால் அவ்வாறு அவர் செய்யட்டும்.
நாட்டில் உள்ள வழங்குதாரர்களைப் பிரதமர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடும். ஆனால் நாட்டில் இல்லாத சட்டதிட்டங்களைக் கொண்டு, பிரஜாவுரிமையை நீக்க முடியாது.
நீதித்துறையைச் சார்ந்தவர்கள் பக்கச்சார்பாக நடத்துகொள்ளமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம்” என்றார்.