(மென்டிஸ் நிறுவன தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தம்)
பிணை முறி மோசடி விவகாரத்தின் சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் இனது எனக் கூறப்படும் டப்ளியூ.எம்.மென்டிஸ் எனப்படும் மது உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஒரு வார காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த நிறுவனத்தின் மது உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் வெலிசர பிரதேசத்திலுள்ள உற்பத்தி நிலைய நடவடிக்கைளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த உற்பத்தி நிலையத்தில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களையும் குறித்த பணியிலிருந்து விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த நிறுவனத்தின் அன்றாட அலுவலக நடவடிக்கைகள் மற்றும் களஞ்சியசாலைகளில் உள்ள மது உற்பத்திகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.