(இஞ்சி கலந்த தேநீரை கர்ப்பிணிகள் குடிப்பதால் இவ்வளவு நன்மையா..?)
ஒரு பெண் கருவுற்றுள்ளார் என்பது அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் சந்தோஷத்திற்குள்ளாக்கக் கூடிய விடயம். கர்ப்ப காலத்தின் போது உண்ண வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிண உணவுகள் எனப் பல உண்டு. அதே போல் இஞ்சி கலந்த தேநீரை கர்பிணித் தாய் ஒருவர் உட்கொள்ளலாமா என்பதை பற்றித் தான் நாம் இன்று பார்க்கப்போகின்றோம். இஞ்சி கலந்த தேநீர் கர்பிணிகளுக்கு சிறந்தது என்றே கூந வேண்டும்.
இதனால் கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது எனப் பார்ப்போம்
01. புற்றுநோய் தடுக்கப்படுவதோடு குணப்படுத்தப்படுகின்றது.
இஞ்சி கலந்த தேநீருக்கு கருப்பை புற்றுநோயை குணமாக்கும் சக்தி உண்டு. கர்ப்ப காலத்தில் இதனை உட்கொள்வது வயிற்றில் உள்ள குழந்தைக்கு சிறந்ததோடு மன அழுத்தத்தையும் இல்லாதொழிக்கின்றது.
02. குடல் எரிச்சலை தணிக்கும்
குடல் எரிச்சல் என்பது வலியை ஏற்படுத்தக்கூடியது. கர்ப்ப காலத்தில் குடல் எரிச்சல் ஏற்படுமாயின் அது தாயை மிகவும் கஷடத்திற்குள்ளாக்கிவிடும். இது போன்ற சந்தர்ப்பம் ஏற்படாதிருக்க வேண்டும் எனில் இஞ்சி கலந்த தேநீரை பருகுவது சிறந்தது.
03. தசைகள் மற்றும் எலும்புகளில் உள்ள வலியை குறைக்கும்
கர்பிணித் தாய்மார்களுக்கு தசைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியை இந்த இஞ்சி தேநீர் குறைக்கின்றது.
04. குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்
கர்ப்ப கால நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள தாயொருவர் இஞ்சி கலந்த தேநீரை பருகுவதால் அவரது உடலில் உள்ள குளுக்கோசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.
05. உடலுக்குத் தேவையான சத்துக்களை உறிஞ்சும்
கருவுற்ற தாய் ஒருவருக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். அதனால் கர்ப்ப காலத்தில் அதிக சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டி ஏற்படும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை இந்த இஞ்சி கலந்த தேநீர் உறிஞ்சிக்கொள்ளும்.
06. குமட்டல் ஏற்படுவதை குறைக்கும்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல்களுக்கு இந்த இஞ்சி கலந்த தேநீரை குடிப்பதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
07. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
கருவுற்றிருக்கும் தாய் ஒருவருக்கு சோர்வு ஏற்படுவதென்பது சாதாரண விடயம் தான். இஞ்சி கலந்த தேநீரை பருகும் பட்சத்தில் அவர்களின் இரத்த ஓட்டம் சீர் செய்யப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும்.
08. வாய்வு வெளியேற்றத்திலிருந்து விடுதலை அளிக்கும்
தாயின் வயிற்றில் உள்ள கருப்பை வளர வளர, வாய்வு வெளியேற்றம் அதிகமாக இருக்கும். இது சாதாரண விடயம் தான். இந்த இஞ்சி கலந்த தேநீரை உட்கொள்வதால் அதிகபடியான வாய்வு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும்.
09. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தாயின் நோயெதிர்ப்புச் சக்தி கர்ப்ப காலத்தில் சற்று மந்தமாக இருக்கும். அதனால் தடுமல் மற்றும் வயிற்றுப்போக்கு என்பன அதிகளவில் ஏற்பட வாய்ப்புண்டு. இஞ்சி கலந்த தேநீரை அருந்துவதன் மூலம் தாயின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
10. மன அழுத்தத்தை குறைக்கும்
பிறக்கவிருக்கும் குழந்தை மற்றும் ஏனைய காரணிகள் தொடர்பில் தாயின் சிந்தனை அதிகரித்துக் காணப்படும். அதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். இது போன்ற சமயங்களில் இஞ்சி கலந்த தேநீர் அருந்துவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.