• Sun. Oct 12th, 2025

பொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Byadmin

Feb 13, 2018

(பொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்)

இலங்கை நாட்டில் மொட்டு மலர்ந்து, மணம் வீசுவதைபொறுத்துக்கொள்ள முடியாமல், ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனைக்கு ஆதரவளித்த முஸ்லிம்கள் மக்கள் மீது தாக்குதல்நடத்தப்படுவதை, நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டுமெனகூட்டு எதிர்க்கட்சியின்  ஊடக பிரிவு வேண்டுகோள்விடுத்துள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இலங்கை நாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாபெரும்வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது இலங்கைநாட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே. யாருமேஎதிர்பார்க்காத விடயம், இந்த வெற்றியில் சிறுபான்மை மக்கள்இந்தளவு பங்களிப்பு செய்வார்கள் என்பதே! அதிலும் குறிப்பாகஇலங்கை முஸ்லிம் மக்கள். 

இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாது, பல இடங்களில்நல்லாட்சி அரசின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீதாகும். உலப்பனை,பயனவங்குவையில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான, ஒருவர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதோடு, கடையும்சூரையாடப்பட்டுள்ளது. இவ் வர்த்தகர், தனது வர்த்தகநிலையத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனைக்குவழங்கியிருந்தார்.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை எரிப்பது, அவர்களுக்குகை வந்த கலை. அதனை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள். இப்படியான வேலையைஇன்னுமின்னும் செய்து, தங்களுக்கு எஞ்சியிருக்கும் கொஞ்சமானத்தையும் போக்கிக்கொள்ள வேண்டாம். உடனடியாகநல்லாட்சி அரசு, இவ்வாறான வன்முறைகளை நிறுத்தும்வகையில், தனது ஆதரவாளர்களுக்கு வழி காட்ட வேண்டும். எங்கள் கட்சி காரர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற போதும், முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சிலர்நாங்கள் தான், ஏதோ வன்முறைகளை செய்கிறோம் என காட்டவருகின்றனர். 

இத் தேர்தல் முடிவானது முஸ்லிம்கள் எங்களோடு கை கோர்க்கஆரம்பித்துள்ளதை எடுத்துக் கூறுகிறது. அதற்கு முஸ்லிகளின்வர்த்தக நிலையங்களை தாக்கி, எங்கள் தலை மீது பழியைபோட்டு, எங்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பமுயற்சிக்கின்றனர். அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளகொந்தராத்து வேலை. அவ்வாறு கொந்துராத்துவழங்கப்பட்டவர்களில் ஒருவரான அசாத் சாலி, இத் தேர்தலில்தனது வட்டாரத்தில் கூட வெற்றிபெற முடியாதளவு தோல்வியைதழுவியுள்ளார். இதுவே இறைவனின் நாட்டத்தால் மக்கள்வழங்கிய தீர்ப்பாகும். இனியும் மக்கள் பொய் வதந்திகளைநம்பி ஏமாற தயாரல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *