• Sat. Oct 11th, 2025

“வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் அங்கு திரும்பிச் செல்லும் வரை நான் யாழ்ப்பாண மண்ணை மிதிக்க மாட்டேன்”.. கர்ஜித்த உடுப்பிட்டிச் சிங்கம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Byadmin

Feb 15, 2018

(“வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் அங்கு திரும்பிச் செல்லும் வரை நான் யாழ்ப்பாண மண்ணை மிதிக்க மாட்டேன்”.. கர்ஜித்த உடுப்பிட்டிச் சிங்கம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்)

• உடுப்பிட்டித் தொகுதிக்கும் பின்னர் நல்லூர் தொகுதிக்கும் பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டவர். (1977 தேர்தலில் இலங்கையில் அதிகூடிய பெரும்பான்மை வாக்குகளால் நல்லூர் தொகுதியில் தெரிவுசெய்யப்பட்டார்)

• பராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக சிறப்புடன் கடமையாற்றினார். மும்மொழியிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்.

• கம்பீரமான குரல்வளமும்¸ தோற்றமும் கொண்டவர். கம்பீரம் காரணமாக பாராளுமன்றத்தில் உடுப்பிட்டிச் சிங்கம் என்று அழைக்கப்பட்டார். விவாதத்திலும்¸ ஆணித்தரமான மேடைப் பேச்சிலும் வல்லவர்.

• நீண்டகாலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக விளங்கினார்.

• வழக்கறிஞர் தொழிலில் புகழடைந்தார்.

• தமிழ் உரிமைப் போராட்டத்தில் தன்னிகரற்ற தலைவராகக் குரல் கொடுத்தார். பல்வேறு அகிம்சை வழிப் பேராட்டங்களில் ஈடுபட்டார்.
• செல்வமும்¸ உயர்குடிப்பிறப்பும் கொண்ட இவர்¸ ஒழுக்க மாண்பு¸ சைவ உணவு முதலியவற்றில் கண்டிப்பாக இருந்தார். பதவியைப் பயன்படுத்தி பணம் சேர்ப்பதை வெறுத்தார். 1983 இனக்கலவரத்தின் போது கொழும்பில் இவரது வீடு¸ வாகனங்கள் முதலானவை தீக்கிரையாக்கப்பட்டன. பிற்காலத்தில் அல்ஹாஜ். எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் புனர்வாழ்வுத் துறை அமைச்சரான போது¸ இச் சேதத்துக்கான நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்தார். எனினும் திரு. சிவசிதம்பரம் இதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

• 1989ல் த.வி.கூ. செயலதிபர் திரு. அமிர்தலிங்கம்¸ திரு. யோகேஸ்வரன் எம்.பீ.¸ திரு. சிவசிதம்பரம் ஆகியோரை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் முன்னைய இருவரும் கொல்லப்பட்டனர். சிவசிதம்பரத்தின் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது எனினும் அவர் உயிர் தப்பினார்.

• தமிழ் – முஸ்லிம் உறவு விரிசலடையும் சந்தர்ப்பங்களில் திரு. சிவசிதம்பரம் கவலையடைந்தார்.

1990ல் வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றியபோது அதனைக் கண்டித்ததுடன்¸ “வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் அங்கு திரும்பிச் செல்லும் வரை நான் யாழ்ப்பாண மண்ணை மிதிக்க மாட்டேன் என்று சபதமிட்டு இறுதிவரை அதனை நிறைவேற்றினார்.

கொழும்பிலேயே வாழ்ந்த அவர் 2002ல் காலமானதும் அவரது உடலையே சொந்த ஊரான யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு எடுத்துச் சென்றனர்.

By: Abdul Cader Najumudeen 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *